அதிவேகமாக சென்று கிணற்றில் கவிழ்ந்த கார் - 3 இளைஞர்கள் உயிரிழப்பு!!

 
tn

தொண்டாமுத்தூர் அருகே கார் ஒன்று கிணற்றில் கவிழ்ந்ததில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

tn

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ரோஷன் என்ற 18 வயதான இளைஞர்  தனது நண்பர்களுடன் நேற்று சிறுவாணி பகுதியில் உள்ள தனியார் கிளப் ஒன்றில் ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளார். இதையடுத்து இன்று அதிகாலை வடவள்ளியில் உள்ள தனது வீட்டிற்கு நண்பர்களுடன் ரோஷன் தனது காரில் சென்றுள்ளார். தொண்டாமுத்தூர் அருகே தென்னமநல்லூர் பகுதியில் அதிகாலை  கார் அதிவேகமாக சென்ற நிலையில் நிலைதடுமாறி அங்கிருந்த  120அடி ஆளமுள்ள கிணற்றில் இரும்பு தடுப்பு சுவரை உடைத்து கிணற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.  

tn

அதிபயங்கரமாக எழுந்த சத்தத்தினால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அத்துடன் உடனடியாக தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.  இந்த விபத்தில் 
3 இளைஞர்கள் உயிரிழந்த  நிலையில் காரை ஓட்டி வந்த ரோஷன் காயங்களுடன்  மீட்கப்பட்டுள்ளார்.  

tn

தீயணைப்பு துறையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.