மாணவியை கர்ப்பமாக்கிய அண்ணன் உட்பட 3 பேர் கைது!

 
ttn

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தாயை இழந்த காரணத்தினால் பெரியம்மாவின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார்.  இதையடுத்து புதுச்சேரியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தங்கி முட்டத்தூரில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் புதுச்சேரியிலிருந்து விழுப்புரத்தில் உள்ள  பெரியம்மா வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார்.

Abuse

இந்த சூழலில் சிறுமிக்கு திடீரென கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உடல்நல பாதிப்பு ஏற்படவே அவர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

arrested

இதுகுறித்து உறவினர்கள் விசாரிக்கையில், மாணவியின் பெரியம்மா மகன் மோகன் ,அதே கிராமத்தைச் சேர்ந்த முதியவர் வெங்கடேசன், ராஜமணி என்பவரின் மகன் இளையராஜா ஆகியோர் சேர்ந்து மாணவியை கூட்டு பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த செஞ்சி அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.