அதிர்ச்சி!! ஒரே நாளில் 2-வது முறையாக உயர்ந்த தங்கம் விலை
May 6, 2025, 16:22 IST1746528769648
தங்கம் விலை ஒரே நாளில் 2-வது முறையாக கிராமுக்கு மேலும் ரூ.75 உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தினமும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. இன்று காலை சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2000 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,200க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.8,775க்கு விற்பனையானது.
தங்கம் விலை ஒரே நாளில் 2-வது முறையாக கிராமுக்கு மேலும் ரூ.75 உயர்ந்து ரூ.9100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம், 600 ரூபாய் அதிகரித்து, ரூ.72,800-க்கு விற்பனையாகிறது.


