பிப்.2ம் தேதி திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

 
திருப்பூர்

பிரசித்தி பெற்ற அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, பிப்ரவரி 2-ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! -  Dinasuvadu

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரர் நாயனார் தேவார பதிகம் பாடி உயிருடன் மீண்டும் உயிர்ப்பித்து எழச் செய்த திருத்தலமாகவும் பிரசித்தி பெற்ற கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோயில் கும்பாபிஷேக விழா வருகின்ற இரண்டாம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 24ஆம் தேதி மகா கணபதியாக பூஜை உடன் தொடங்கிய நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அவிநாசியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட தீர்த்த குட ஊர்வலமானது நேற்று நடைபெற்றது. 

பழமை வாய்ந்த அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் | avinashi lingeswarar temple

இந்நிலையில் பிரசித்தி பெற்ற அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, பிப்ரவரி 2-ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி 3-ம் தேதி பணி நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.