மதுரையில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

மதுரையில் 10 இடங்களில் 2வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது.
மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெயபாரத், அன்னை பாரத் மற்றும் கிளாட்வே சிட்டி ஆகிய தனியார் கட்டுமான நிறுவனங்களில் பல கோடி ரூபாய்க்கு வருமான வரியை நடந்துள்ளதாக தகவல் கிடைத்த நிலையில், நேற்று சென்னையில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் மதுரைக்கு சென்றனர். மதுரையில் உள்ள வருமானவரித்துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்புடன் அவினியாபுரம், வில்லாபுரம் ,திருப்பாலை, திருபுவனம் ஆகிய இடங்களில் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களிலும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் வீடுகளிலும் ரெய்டு நடத்தப்பட்டது. இந்நிலையில் மதுரையில் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரில் அன்னை பாரத், கிளாட்வே கிரீன் சிட்டி நிறுவனம் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மதுரையில் இரண்டாவது நாளாக பத்து இடங்களில் வருமான வரித்துறையில் சோதனை நடைபெற்று வருகிறது.
மதுரையை தொடர்ந்து திண்டுக்கல்லிலும் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடந்து வருகிறது. ஜெயபாரத் நிறுவனத்திற்கு சொந்தமான குவாரிகளில் அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல் சின்ன கரட்டுப்பட்டி, மார்க்கம்பட்டி ஆகிய இடங்களில் உள்ள 2 குவாரிகளில் ஆய்வு நடைபெறுகிறது.