ஒரே நாளில் சென்னை மெட்ரோ ரயில்களில் 2.30 லட்சம் பேர் பயணம்!!

 
metro

ஒரே நாளில் சென்னை மெட்ரோ இரயில்களில் 2.30 லட்சம் பேர் பயணித்துள்ளார்கள் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், வெளி ஊரில் இருந்து வரும் பயணிகளுக்கும் மெட்ரோ இரயிலில் பயணிக்கும் போது ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அதன் பயனாக சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது. இது பயணிகளின் நல்வரவேற்பை பெற்றுள்ளதாகவும், பயன்பாடும் அதிகரித்து வருவதையும் காட்டுகிறது.

metro

அந்த வகையில், ஜனவரி மாதத்தில் அதிகபட்சமாக 03.01.2022 அன்று 1,35,977 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் அதிகபட்சமாக 28.02.2022 அன்று 1,43,252 பயணிகளும், மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக 28.03.2022 அன்று 2,10,634 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக 25.04.2022 அன்று 1,74,475 பயணிகளும், மே மாதத்தில் அதிகபட்சமாக 26.05.2022 அன்று 1,91,720 பயணிகளும், ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக 03.06.2022 அன்று 2,02,456 பயணிகளும், ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 27.07.2022 அன்று 1,97,307 பயணிகளும், ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 29.08.2022 அன்று 2,20,898 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று (12.09.2022) ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 2,30,611 பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.இதில் அதிகபட்சமாக புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் 21,419 பயணிகளும், திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் 11,189 பயணிகளும், கிண்டி மெட்ரோ இரயில் நிலையத்தில் 10,599 பயணிகளும், விமான நிலையம் மெட்ரோ இரயில் நிலையத்தில் 10,289 பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.

metro

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி" என்று குறிப்பிட்டுள்ளது.