குமரி மாவட்டத்திற்கு வரும் 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை

 
kanyakumari

வரும்28ஆம் தேதி வாவுபலி பொருட்காட்சியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

Kanyakumari (CAPE) Railway Station, Cape Comorin Kanyakumari |  Kanyakumarians

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு குழித்துறை நகராட்சியால் நடத்தப்படும் வாவுபலி தினத்தினை முன்னிட்டு 28.07.2022 (வியாழக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

வரும் 28-ம் தேதி  அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2022 ஆகஸ்ட் திங்கள் இரண்டாவது சனிக்கிழமை (13.08.2022) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும், என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார்.