12-ம் வகுப்பு பொதுத்தேர்வு- கள்ளக்குறிச்சியில் 2,831 மாணவர்கள் ஆப்சென்ட்

 
college exam

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 2,831 மாணவர்கள் ஆப்சென்ட் ஆனதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வில் 2,831 மாணவர்கள் ஆப்சென்ட்

தமிழ்நாடு, புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 350 மாணவர்களும் 10 ஆயிரத்து 218 மாணவிகளும் என மொத்தம் 20 ஆயிரத்து 568 பேர் எழுத இருந்தனர். இதற்காக 74 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நாளை தொடங்கவுள்ள பிளஸ்-1 தேர்வை 9 ஆயிரத்து 200 மாணவர்கள், 9 ஆயிரத்து 64 மாணவிகள் என மொத்தம் 18 ஆயிரத்து 264 பேர் எழுத உள்ளனர். இன்று காலை 10 மணிக்கு தொடங்கியுள்ள தேர்வானது மதியம் 1.15 மணி வரை நடைபெற்றது.


இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 2,831 மாணவர்கள் ஆப்சென்ட் ஆனதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். 1,156 மாணவர்களும், 1,675 மாணவிகளும் தேர்வில் பங்கேற்கவில்லை.