"தமிழகத்தில் 282 பேருக்கு இன்புளுன்ஸா காய்ச்சல்" - அமைச்சர் தகவல்!!

 
tn

தமிழகத்தில் 282 பேருக்கு இன்புளுன்ஸா காய்ச்சல் உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

ttn

தமிழக முதல்வர் ஸ்டாலினின்  வழிகாட்டுதலின்படி இன்று சென்னை குழந்தைகள் நல மருத்துவமனை காய்ச்சல் பிரிவில் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் மருத்துவம் குறித்து விசாரித்து காதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். 

tn
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் , "சென்னை குழந்தைகள் மருத்துவமனையில் 18 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சாதாரண காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 282 ஆக உள்ளது. கொரோனா தாக்கத்துக்கு பிறகு தற்போது மீண்டும் இன்ஃபுளுவென்சா காய்ச்சல் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 282 பேருக்கு இன்புளுன்ஸா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

tn

தமிழகத்தில் இன்புளுன்ஸா என்ற காய்ச்சலால் 282 குழந்தைகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்புளுன்ஸா காய்ச்சலால் யாரும் சிகிச்சை பெறவில்லை; சிகிச்சை பெறும் 129 குழந்தைகளில் 121 பேருக்கு சாதாரண காய்ச்சல், 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.