திருமணம் ஆகாத விரக்தி- பிறந்த நாளிலேயே உயிரை மாய்த்துக் கொண்ட பட்டதாரி பெண்

 
suicide suicide

செங்கல்பட்டில் திருமணம் ஆகாத விரக்தியில்  இளம் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

suicide

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பாரதியார் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு 2 மகள்களும், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகளுக்கும் மகனுக்கும் திருமணமான நிலையில் இளைய மகள் தீபிகா (வயது 28). எம்பிஏ பட்டதாரியான இவருக்கு கடந்த ஏழு வருடங்களாக வரன் பார்த்து வந்த நிலையில் திருமணம் ஆகாத விரக்தியில் தீபிகா இன்றைய தினம் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். பிறந்த நாளான இன்று கோவிலுக்கு செல்லலாம் என பூஜை சாமான்கள் வாங்கி வைத்துக்கொண்டு பெற்றோர், தயாராக இருந்த நிலையில் குளித்துவிட்டு வருவதாக கூறி கழிவறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை தட்டிப் பார்த்தனர் பின்பு கதவை திறக்காததால் உழைத்துக் கொண்டு உள்ளே பார்த்தபோது உள்ளே ஷவரில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தீபிகா தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் இவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். 

உடனடியாக சிங்கப்பெருமாள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்பு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் ஆகாத விரட்டியில் இளம் பட்டதாரி பெண் தனது பிறந்த நாளான என்று உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.