சென்னையில் வாகன சோதனையின் போது 28 கிலோ தங்கம் பறிமுதல்
Mar 5, 2025, 10:13 IST1741149806304

சென்னையில் வாகன சோதனையின் போது 28 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெரினா சாலையில் மாநகர காவல்துறையினர் வழக்கம் போல் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அந்த காரில் அதிகளவிலான தங்கம் இருப்பது தெரியவந்தது. மெரினாவில் வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் எடுத்து சென்ற 28 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
உரிய ஆவணங்கள் இன்று 28 கிலோ தங்கத்தை கொண்டு சென்ற பிரகாஷ், கிரண், அனில், பால் ஆகிய 4 பேரிடம் அண்ணா சதுக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 28 கிலோ தங்க நகைகள் வியாபாரத்திற்காக சவுகார்ப்பேட்டைக்கு கொண்டு சென்ற போது சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைப்பற்றப்பட்ட நகைகள் வணிகவரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.