எடப்பாடியின் சர்வாதிகாரத்தால் வெறுத்துப்போன வேலுமணி அணி! தவெகவுக்கு செல்லும் 28 எம்எல்ஏக்கள்
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான பூகம்பம் வெடிக்க தொடங்கியுள்ளது. இபிஎஸ்-ன் தன்னிச்சையான முடிவுகள், சர்வாதிகார போக்கு ஆகியவற்றால் வெறுத்துப்போன மூத்த நிர்வாகிகள், தவெகவுக்கு தாவ முடிவு செய்துள்ளனர்.
கொங்கு மண்டலத்தில் தனக்கு போட்டியாக வருகிறார் என்பதற்காகவே, வேலுமணியை கடந்த 2 ஆண்டுகளாக இபிஎஸ் ஓரங்கட்டி வருகிறார். கட்சி கூட்டங்களில் கூட வேலுமணி பேச அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் சிவி சண்முகத்தின் செல்வாக்கை குறைக்க, அவருக்கு எதிராகவே உள்குத்து வேலைகளை இபிஎஸ் செய்து வருகிறார். இதனால் வட மாவட்ட எம்எல்ஏக்கள் பலரும் இபிஎஸ் மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்த அவமானங்களை பொறுக்க முடியாமல், தங்கமணி, வேலுமணி, சிவி சண்முகம் தலைமையில் 28 எம்எல்ஏக்கள் ஒன்று திரண்டு "இனி இபிஎஸ் தலைமையில் கட்சி உருப்படாது" என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இதனால் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் 28 எம்எல்ஏக்களின் ரகசிய சந்திப்பு நடந்து வருவதாகவும், அடுத்த 48 மணி நேரத்தில் இபிஎஸ்க்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

