பழனி கோயில் குடமுழுக்கு- ஜன.27ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

 
palani

பழனி முருகன் கோவில் குடமுழுக்கு முன்னிட்டு 27-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

palani murugan temple

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. வருகிற 27 ஆம் தேதி காலை 8:15 மணி முதல் 9:15 மணி வரை நடைபெற உள்ளது. குடமுழுக்கு விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான முருக பக்தர்கள் பழனி வந்து தரிசனம் செய்வார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் போதிய பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள், பேருந்து வசதிகளை செய்து வருகிறது. 

இந்த நிலையில் குடமுழுக்கு விழா நடைபெறும் 27-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டதன் பேரில், தமிழக அரசு திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. 27 ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி 25ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.