அப்பாக்களின் நாற்காலிகள் காலியாக இருந்தாலும்… கனிமொழி உருக்கம்

 

அப்பாக்களின் நாற்காலிகள் காலியாக இருந்தாலும்… கனிமொழி உருக்கம்

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்த நாள் இன்று. இந்த நாளில் , “மக்களின் உயிரைக் காப்பதே நம் தலையாய பணி; அதற்காக நம்மை முழுமையாக அர்ப்பணித்துச் செயலாற்றுவதே தலைவர் கலைஞரின் பிறந்தநாள் விழாவுக்கு சிறப்பு சேர்ப்பதாகும்” என்று தெரிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

அப்பாக்களின் நாற்காலிகள் காலியாக இருந்தாலும்… கனிமொழி உருக்கம்

அவர் மேலும், தலைவர் கலைஞர் அவர்களின் பெயருக்கும் – புகழுக்கும் அணிசேர்க்கும் வகையில், இந்தப் பேரிடர் காலத்தில் இணையிலா பணியாற்றி – மக்கள் நலன் போற்றிக் காத்திட வேண்டும் என்ற உறுதியுடன் பணியாற்றி வருகின்றேன்” என்றும் தெரிவித்திருக்கிறார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இன்று முதலமைச்சர் பொறுப்பில் இல்லை என்றாலும், அவர்தான் ஆட்சி செய்கிறார் பதவியேற்பின் போது உறுதிமொழி ஏற்ற நான் என் உள்ளத்தில் அதை ஆழமாக பதிய வைத்துள்ளேன்”என்று உருக்கமுடன் குறிப்பிட்டிருக்கிறார் முதல்வர்

கனிமொழி எம்.பி., தனது தந்தை குறித்து,
‘’அறை முழுவதும் மகிழ்ச்சியும் நகைச்சுவையும் அறிவும் நிறையச்செய்யும்
அப்பாக்களின் நாற்காலிகள் காலியாக இருந்தாலும்
அவை நினைவுகளால்
நிரம்பி வழிகின்றன.’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.