ஊர் திரும்பும் மக்கள் - இன்று 2,605 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

 
bus

பொங்கல் பண்டிகை ஒட்டி கடந்த நான்கு நாட்களாக அரசு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.  இதன் காரணமாக பல்வேறு மக்கள் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.  பொங்கல் பண்டிகை நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மக்கள் மீண்டும் ஊர் திரும்ப தொடங்கியுள்ளனர்.  பொது மக்களின் வசதிக்காக இன்று 2605 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

BUS

கடந்த 13ஆம் தேதி பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக தமிழ்நாடு முழுவதும் 16,000 மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன.  இதன் காரணமாக பயணிகள் நெரிசலின்றி சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டனர்.  தற்போது ஊர் திரும்புவதற்கான சிறப்பு பேருந்துகள் இயக்கம்  நேற்று முன்தினம் தொடங்கியது.

omni bus

நேற்று அதிகாலை முதல் பெருங்களத்தூர்,  தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதியில் இருந்து போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.  நேற்று காலை சென்னை திரும்பியவர்களின் வசதிக்காக கூடுதலாக மாநகர பேருந்துகளும் இயக்கப்பட்டன.