நிவர் புயல் பாதிப்பு : விவசாயிகளுக்கு ரூ.26.59 கோடி ஒதுக்கீடு!

 

நிவர் புயல் பாதிப்பு : விவசாயிகளுக்கு ரூ.26.59 கோடி ஒதுக்கீடு!

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.26.59 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நிவர் புயல் பாதிப்பு : விவசாயிகளுக்கு ரூ.26.59 கோடி ஒதுக்கீடு!

மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ .16.08 கோடியும், தோட்டக்கலைத்துறை சார்பில் ரூ.10.51 கோடியும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு அரசாணை குறிப்பிட்டுள்ளது. மானாவாரி நெற்பயிர் தவிர அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணம் ரூ.10,000 வழங்கப்படும் என்றும் நெற்பயிர், நீர்பாசன வசதி பெற்ற இதர பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு இடுபொருள் நிவாரணம் ரூ.20,000 வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

நிவர் புயல் பாதிப்பு : விவசாயிகளுக்கு ரூ.26.59 கோடி ஒதுக்கீடு!

மேலும், பல்லாண்டு கால பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணத் தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.25,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய நிவர் புயலால், ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கியது. மழை பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட்ட முதல்வர், விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்க உத்தரவிட்டிருந்தார். அதன் படி, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.