பிஏக்களால் நெருக்கடி! சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுப்பதாக அமைச்சர்கள் வேதனை

 
ச்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் தவெக வெற்றி பெற்று பிற கட்சிகள் உதவியுடன்  ஆட்சி பொறுப்பேற்றது.  

தவெக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு! : Tvk  Cabinet Expansion Departments Allocated To New Ministers - kumudamnews.com

தவெக ஆட்சியில் முதல் முறையாக கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தவெகவில் செங்கோட்டையனை தவிர மற்ற அமைச்சர்கள் எல்லாம் புதியவர்கள்.  அவர்கள் 25 பேருக்கு முக்கிய அமைச்சர் ஒருவர் தனக்கு வேண்டப்பட்டவர்களை பிஏக்களாக பணி அமர்த்தியுள்ளார். அவர்கள் புதிய அமைச்சர்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.  அவர்களால் புதிய அமைச்சர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை உள்ளது. அந்த அமைச்சர்கள் எந்த கோப்பில் கையெழுத்து போட்டாலும் உடனடியாக முக்கிய அமைச்சருக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதனால் துறையின் ரகசியத்தை காப்பாற்ற முடியாத நிலை உள்ளது. மேலும் முதல்வர் விஜய் பெயரை கூறிக்கொண்டு அந்த முக்கிய அமைச்சர் பைலில் கையெழுத்து போடுமாறு பிஏக்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். 

முதல்வருக்கு தெரியாமலேயே அந்த முக்கிய அமைச்சர் புதிய அமைச்சர்களை தொடர்ந்து மிரட்டியும் அவர்களை அச்சுறுத்தியும் அவர்களை செயல்பட விடாமலும் தடுத்து வருகின்றார். இதனால் அந்த அமைச்சர்கள் தங்களது துறையில் முழுமையாக செயல்பட முடியாமல் தவித்து வருகின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும் அது போல ஒவ்வொரு அமைச்சர்களை சுதந்திரமாக செயல்பட விட்டால் தான் அவர்களின் வேலையை நாம் தெரிந்து கொள்ள முடியும். அதை விடுத்து அவர்களை தங்களது கை பாவைகளாக மாற்றும் முயற்சியில் முக்கிய அமைச்சர் ஈடுபட்டு வருவதாக புதிய அமைச்சர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.