டெங்கு காய்ச்சலுக்கு 24 வயது இளைஞர் உயிரிழப்பு...!!!
Oct 22, 2026, 08:00 IST1792636216000
தமிழகத்தில் பருவமழை காலம் தொடங்கியுள்ள சூழலில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க போதிய நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொள்ள வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. 24 வயதான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முறையாக சிகிச்சை அளிக்காததே உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 24 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

