தம்பிதுரை எம்.பிக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அனுப்பிய கடிதம்

 

தம்பிதுரை எம்.பிக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அனுப்பிய கடிதம்

கடந்த மார்ச் 23 ஆம் தேதி அன்று மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது அதிமுக எம்பி தம்பிதுரை, ஈழத்தமிழர்களின் அதிகார பகிர்தலுக்கு உறுதி செய்ய அக்கரை செலுத்த வேண்டும். தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டவும், இலங்கை அரசு சமாதான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தினார்.

தம்பிதுரை எம்.பிக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அனுப்பிய கடிதம்

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தம்பிதுரை எம்பிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில், இலங்கை தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்ட உறுதியான பயனுள்ள நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசுக்கு இந்தியா அறிவுறுத்தி இருக்கிறது.

இலங்கை அரசு தமிழர்களுடன் அதிகார பகிர்வை உறுதி செய்ய முன்னர் வாக்களித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் மாகாண கவுன்சில்களுக்கான தேர்தலை விரைந்து நடத்த வேண்டும். மாகாண கவுன்சில் முழு சுதந்திரத்துடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். இலங்கை அரசியல் சட்டத்தின் படி தமிழர்களுக்காக வழங்கப்படுவதாக வாக்களித்திருந்த அனைத்து அம்சங்களையும் பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை இலங்கை அரசுக்கு தெரிவிக்கின்ற வகையில் இந்திய அரசு தனது நிலைப்பாட்டினை அதிகாரபூர்வமாக வெளியுறவுத் துறைக்கு தெரிவித்து இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

தம்பிதுரை எம்.பிக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அனுப்பிய கடிதம்

மேலும், ஜெனிவா மனித உரிமை கவுன்சிலில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சர்வதேச தீர்மானத்தின் வாக்கெடுப்பினை இந்தியா புறக்கணித்தாலும் தனது நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வமாக இந்திய அரசு விளக்கி இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழர்கள் கேட்கின்ற சமத்துவம், சம உரிமை, நீதி , நிலைத்த அமைதி, சமாதானம் குடிமக்களுக்கான தண்ணீர் ஆகியவற்றை தமிழர்களுக்கு உதவி செய்யும் வகையில் சர்வதேச நாடுகளுக்கும் முன்னர் அளித்த வாக்குறுதிகளின் படி ஒப்புறவு நடவடிக்கைகளில் இலங்கை அரசு அக்கறை காட்ட வேண்டும் என்பதையும் இந்தியா எழுத்துப்பூர்வமாக வலியுறுத்தி வாக்கெடுப்பு புறக்கணிப்புக்காண விளக்கத்தினையும் எழுத்துப்பூர்வமாக வைத்துள்ளதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார்.