'24 மணிநேரம் டைம்.. முடிஞ்சா கைது பண்ணுங்க..’ - தமிழக அரசுக்கு அண்ணாமலை சவால்..

 
Annamalai
 

"ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன், 24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள்" என  பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தமிழக அரசுக்கு  சவால் விடுத்துள்ளார்.  

தமிழ்நாட்டில்  புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டதாகவும்,   இரு பிரிவினரிடையே மோதலை தூண்டியதாகவும், வன்முறையை தூண்டும் விதமாக கருத்து தெரிவித்ததாகவும்தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது 5 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   இந்தநிலையில் திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும் என தமிழக அரசுக்கு பாஜக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

stalin

 இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன். திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும். பொய் வழக்குகளை போட்டு ஜனநாயக குரல்வளையை நசுக்கி விடலாம் என்று எண்ணுகிறீர்கள். ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன், 24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள்” என்று பதிவிட்டிருக்கிறார்.