“இதனை நிறைவேற்றிவிட்டு என்னை அடக்கம் செய்யுங்கள்”... உள்ளங்கையில் எழுதிவைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை

 

நெல்லை அருகே தந்தை கொலை செய்யப்பட்ட துயரத்தை தாங்க முடியாத வேதனையில் மகள் தற்கொலை செய்துகொண்ட் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி வடக்கு நெல்லையப்பபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் கடந்த 17ஆம் தேதி மர்ம கும்ப கும்பல்களால் கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்டு 5 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் காவல்துறையினர் மர்மகும்பல்களை கைது செய்யாமல் இருக்கின்றனர். இதனால் அவரது உடலை உறவினர்கள் பெற்றுக் கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து ஆறுமுகத்தின் மகளான பேபி கனி (வயது 23). தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மன வேதனையில் இருந்திருக்கிறார். இதனால் இன்று காலை இளம்பெண் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரது உடலை  நெல்லை அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு வந்தனர். அப்பொழுது அந்த பெண்ணை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும் காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில் இறந்த இளம் பெண் தனது தந்தை இறந்த காரணத்தினால் என்னால் இழப்பு தாங்க முடியவில்லை. எனது உறவினர் ஒருவர் தான் இதற்கு காரணமாக இருக்கும். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்திருப்பது தெரிய வந்தது. மேலும் தனது உள்ளங்கையிலும் இந்தக் கடிதத்தில் எழுதி இருப்பதை நிறைவேற்றிவிட்டு என்னை அடக்கம் செய்யுங்கள் எனவும் அந்த இளம் பெண் எழுதி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


இதைக் கண்டித்து இறந்த ஆறுமுகம் மற்றும் அவரது மகளின் உறவினர்கள் ஊர்காரர்கள் அனைவரும் சேர்ந்து இந்த சம்பவத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி நெல்லை அரசு மருத்துவமனை முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பாளையங்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அரசு மருத்துவமனை முன்பாக அரை மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.