நோட்டாவுக்கு 23 வாக்குகள் - தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ..

 
 நோட்டாவுக்கு 23 வாக்குகள் - தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ..


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று நிலவரங்களை  தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.  இதுவரை  2 சுற்றுகள் முடிவடைந்து காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். 2 சுற்றுகள் முடிவடையும் வரையில் முதல் சுற்றின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது.  

 நோட்டாவுக்கு 23 வாக்குகள் - தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ..

இதனால் செய்தியாளார்கள்  அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து, 3வது சுற்று  எண்ணும் பணி நிறுத்தப்பட்டது.  இதனையடுத்து முதல் சுற்று முடிவுகளை அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகு 3 வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்.

அதன்படி,  தற்போது  முதல் சுற்றின் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது.  இதன்படி, ஈவிகேஎஸ் இளங்கோவன் 8,429 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 2,873 வாக்குகள் பெற்றுள்ளார். நாதக வேட்பாளர் மேனகா 522 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 112வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில் சுயேட்சை வேட்பாளர் முத்து பாவா 178 வக்குகள் பெற்றிருக்கிறார். சுயேட்சை வேட்பாளரை விட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆனந்த் குறைவான வாக்குகளே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  முதல் சுற்றில் நோட்டாவில் 23 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து 3 சுற்று வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.