செயற்பொறியாளர்களின் அலுவலகப் பயன்பாட்டிற்காக 23 வாகனங்களை தொடங்கி வைத்தார் முதல்வர்

 
tn

தாட்கோ மாவட்ட மேலாளர்கள் மற்றும் பயன்பாட்டிற்காக 23 வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.

stalin

செயற்பொறியாளர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்படும் தாட்கோ நிறுவனத்தின், மாவட்ட மேலாளர்கள் மற்றும் செயற்பொறியாளர்களின் அலுவலகப் பயன்பாட்டிற்காக 2 கோடியே 4 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 23 வாகனங்களை வழங்கிடும் விதமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அவ்வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தூய்மைப் பணியாளர்களுக்கு வீடுகள் வாங்க மானியம் வழங்குதல்

tn2022-23ஆம் ஆண்டிற்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கையில், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள, வீடற்ற 500 தூய்மைப் பணியாளர் உறுப்பினர்களுக்கு தகுதியின் அடிப்படையில் தலா ரூ.11 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.55 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்படும் பயனாளிகள் பங்களிப்புடன் கூடிய வீடுகள் வாங்க மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, வீடற்ற 500 தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.55 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள வீடுகளை வாங்க அவர்களுக்கு மானியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதற்கட்டமாக 7 தூய்மைப் பணியாளர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.