தமிழ்நாடு முழுவதும் 2,230 காவலர்கள் பணியிட மாற்றம்..!

 
police police

தமிழ்நாடு முழுவதும் 2,230 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

தமிழ்நாடு அரசு நிர்வாகக் காரணங்களுக்காக அவ்வப்போது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவர். அதேபோல் தமிழ்நாடு காவல்துறைக்குள்ளும் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.    தமிழ்நாடு காவல்துறையில் ஐஜி-க்கள் தொடங்கி  கடைநிலை காவலர்கள் வரை பணியிட மாற்றம் செய்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.   ஏற்கனவே நான்கு ஐஜி-க்கள்,  2 டிஐஜி-க்கள் ,  29  காவல் கண்காணிப்பாளர்கள், 40 துணை காவல் கண்காணிப்பாளர்கள்  பணியிடமாற்றம் செய்யப்பட்டு உத்தரவுகள் வெளியானது.  அந்தவகையில்  தற்போது  தமிழகம் முழுவதும் உள்ள 2,230 காவலர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

POLICE

இந்த நிலையில் உதவி ஆய்வாளர் பொறுப்பிற்கு கீழே உள்ள காவலர்கள் 2,230 பேரை பணியிட மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.  நிர்வாக காரணங்கள் மற்றும் தனிப்பட்ட விருப்பங்கள் , சர்ச்சையில் சிக்கியது தொடர்பான அடிப்படையில் கடந்த சில நாட்களாக காவல்துறையில் பணியிட மாற்றங்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இன்னும் பல ஐபிஎஸ் அதிகாரிகள்,  காவல் உயர் அதிகாரிகள்  பணியிடமாற்றம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.