2,222 பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வு - விண்ணப்பப் பதிவு தொடங்கியது

 
tn

2222 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான போட்டி தேர்வு வருகின்ற ஜனவரி 7ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் அறிவித்தது.  குறிப்பாக தமிழ் - 394, ஆங்கிலம் - 252, கணிதம் - 233, மற்றும் இயற்பியல் - 292 என மொத்தம் 2,222 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

teachers

நவம்பர் ஒன்றாம் தேதி முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் நவம்பர் 30-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1 முதல் 30 ஆம் தேதி வரை தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பட்டதாரிகள் தேர்ச்சி பெற 45 மதிப்பெண்களும், பொது பிரிவை சேர்ந்த பட்டதாரிகள் தேர்ச்சி பெற 60 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

teachers

இந்நிலையில் 2,222 பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது. http://trb.tn.gov.in என்ற இணையதளம் வழியாக தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்- 2ல் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.