220 நாட்கள் பள்ளிகள் செயல்படும்- பள்ளிக்கல்வித் துறை

 
PM Schools

நடப்பு கல்வியாண்டில் 220 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என  பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

school


கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில்  கத்திரி வெயிலுக்கு முன்பாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களில் அதிக அளவாக 113 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது. தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கத்தால், பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டு, நாளை திறக்கப்படவுள்ளது. 6ம் தேதி திறக்கப்படும் என முன்பு கூறப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கத்தால் 4 நாட்கள் கழித்து திறக்கப்படுகிறது.

இந்நிலையில் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, நடப்பு கல்வியாண்டில் 220 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என  பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. செப்டம்பர் 29 முதல் அக்டோர் 2 வரை காலாண்டு விடுமுறையும், டிசம்பர் 24 முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை அரையாண்டு விடுமுறையும் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சராசரியாக 210 நாட்களுக்கு பள்ளிகள் செயல்பட்ட நிலையில், இவ்வாண்டு கூடுதலாக 10 வேலை நாட்கள் அதிகரித்து 220 நாட்கள் செயல்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.