ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 22 வயது இளைஞர் தற்கொலை

 
death

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே 22 வயதான இளைஞர் ஒருவர் ஆன்லைன்  சூதாட்டத்தால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Death Of Hocky Player In Haldwani - हॉकी के होनहार खिलाड़ी की सड़क हादसे  में मौत - Nainital News

 தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த பொம்மனூர் கிராமத்தைச் சேர்ந்த கோகுல் என்ற இளைஞர், வீட்டிலிருந்தவர்களுக்கு தெரியாமல், வேறு செலவுகளுக்காக வீட்டில் வைக்கபட்டிருந்த  பணத்தை எடுத்து  ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்துள்ளார், எடுத்த பணத்தை மீண்டும் திருப்பி வைக்க முடியாத நெருக்கடி, வீட்டிலுள்ளவர்களுக்கு தெரியவந்தால் என்ன ஆகுமோ என்ற பயத்தி்ல் கோகுல்,  கடந்த பத்து தினங்களுக்கு முன்னர் யாருக்கும் தெரியாமல் எலிபேஸ்ட் உண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார், 

மூன்று தினங்களை கடந்த பின் கோகுலுக்கு உடல்நல கோளாறு ஏற்படவே, முதலில் பாலக்கோட்டில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு உடல் நிலை மோசமாக,வேலூரில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்தார். சுமார் 4 லட்ச ரூபாய்க்கு மேல் செலவழித்தும் இளைஞரை காப்பாற்ற முடியவில்லை, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் கடந்த 3 ம் தேதி இரவு பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த கோகுல் ஒசூரில் தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்ததுள்ளார், வேலை பிடிக்கவில்லை எனக்கூறி வீட்டிலிருந்து வந்த கோகுல், செல்போன் மூலம் ஆன்லைன் சூதாட்டம் விளையாட தொடங்கி பணம் கிடைக்கிறதே என நம்பி, பணத்தை இழந்து, தனது உயிரயையும் இழந்திருக்கிறார்.