22 அரசியல் கட்சிகள் தமிழகத்தில் செயல்படாதவை! தேர்தல் ஆணையம் அறிவிப்பு

 
e

தமிழ்நாட்டில் 22 அரசியல் கட்சிகள் செயல்படாதவை என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  செயல்படாத கட்சிகளின் பெயர் பட்டியல் தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன.

 இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் நாடு முழுவதும் உள்ள பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பற்றிய தகவல்களை திரட்டி வந்தது.   இதில் தேர்தலில் பங்கேற்காத கட்சிகள்,  கணக்குகளை உரிய வகையில் காட்டாத கட்சிகள் ஆகியவற்றின் பெயரை மாநில வாரியாக தேர்தல் ஆணையம் பட்டியலிட்டு வெளியிட்டது. அதன்படி தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட 233 கட்சிகளில் செயல்படாத கட்சிகள் இடம் பெற்றிருந்தன அந்த கட்சிகளுக்கு 30 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. 

t

 அதன்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் நான்கு கட்சிகள் மட்டுமே விளக்கம் அளித்து இருக்கின்றன.   தேர்தல் ஆணையம் அளித்த காலக்கெடுகள் முடிந்தது அடுத்து 233 பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் 22 கட்சிகள் எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை என்பதும்,  வருமானவரி கணக்கையும் தாக்கல் செய்யவில்லை என்பதும் தெரிய வந்திருக்கிறது.  உரிய கால அவகாசத்தில் விளக்கமளிக்காததாலும்  பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலில் இருந்து அக்கட்சிகளை நீக்கி உத்தரவிட்டிருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்.

 உரிய விளக்கம் அளித்தாலும் கணக்குகளை தக்கல் செய்யும் பட்சத்திலும் மீண்டும் பட்டியலில் அந்த கட்சிகளின் பெயர் இணைக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.   தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் நான்கு கட்சிகள் மட்டுமே விளக்கம் அளித்து இருக்கின்றன.  அந்த விளக்கம் தேர்தல் ஆணையத்திற்கு  அனுப்பப்பட்டிருக்கின்றன.

 எந்த தேர்தலிலும் போட்டியிடாமல் வருமான வரி உள்ளிட்ட கணக்குகளையும் தாக்கல் செய்யாமல் தேர்தல் ஆணையத்திடம் அளித்த முகவரியிலும் செயல்படாமல் தொடர்பு கடிதங்களும் திரும்பி வந்து விட்டதால் 22 கட்சிகளை செயல்படாத கட்சிகள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.  அந்த கட்சிகளின் பெயர்கள் பட்டியல் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன.