தமிழகம் முழுவதும் 2,120 சிறப்பு பஸ்கள் இயக்கம்..!!

 
Q

அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு:-

கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 505 சிறப்புப் பேருந்துகள், 15-ந் தேதி (சனிக்கிழமை) 570 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 110 சிறப்புப் பேருந்துகள், 15-ந் தேதி (சனிக்கிழமை) 110 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மாதவரத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு 14 மற்றும் 15-ந் தேதிகளில் நாள் ஒன்றுக்கு தலா 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

வெளி மாவட்டங்கள் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

வார விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து பயணிகள் சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக, 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேவைகேற்ப பல்வேறு இடங்களில் இருந்து 465 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.