டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பம்!!

 
tnpsc

குரூப் 4 தேர்வு எழுத தமிழ்நாடு முழுவதும் 21 லட்சம் பேர் விண்ணப்பத்துள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

TNPSC

அரசு காலி பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தி அதன் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர் அந்தவகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான வருடாந்திர திட்டம் கடந்த நவம்பரில் வெளியிடப்பட்டது.   அதன்படி குரூப்-4 தேர்வானது வருகிற ஜூலை 24ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.  இதற்கு காலி பணியிடங்கள் ஆக 7383 பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. முதல்முறையாக நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் வீட்டு வசதி வாரியங்கள் உள்ள 163 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. அத்துடன் குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர் , தட்டச்சு செய்பவர், ஸ்டேனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

tnpsc3

இத்தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகள் கேட்கப்படும். இதில் 100 கேள்விகள் தமிழ் மொழி தொடர்பானதாகவும் , 75 கேள்விகள் பொது அறிவு தொடர்பானதாகவும் இருக்கும்.  இந்நிலையில் 
மார்ச் 30-ஆம் தேதி முதல் http://www.tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாக குரூப் 4 தேர்வு எழுத தேர்வர்கள் விண்ணப்பித்து வந்த நிலையில், 21 லட்சத்து 11ஆயிரத்து 357 பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மொத்தம் 7,382 காலி பணியிடங்களுக்கு நடத்தப்படும் இந்தத் தேர்வில், 81 பணியிடங்கள் விளையாட்டுப் பிரிவில் மூலம்   நிரப்பப்படும் என்பது கவனிக்கத்தக்கது.