தமிழகத்தில் 21 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

 
tn assembly

தமிழகத்தில் 21 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்தமிழகத்தில் 21 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது, 7 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 

transfer

சைலேஷ்குமார் யாதவ் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணாநகர் துணை ஆணையராக ரோஹித் நாதன் ராஜகோபால், காவல்துறை நலவாரிய பிரிவு டிஜிபியாக கருணாசாகர், சென்னை தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக மெகலினா ஐடன், சென்னை மகளிர், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு துணை ஆணையராக ஜி.வனிதா, சென்னை மேற்கு மண்டல இணை ஆணையராக மனோகர், சென்னை காவல் தலைமையக துணை ஆணையராக எஸ்.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.


இதேபோல் தென்காசி, தஞ்சை, சிவகங்கைக்கு புதிய எஸ்பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இ.டி.சாம்சன் என்பவரும், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆஷிஷ் ராவத்தும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை அமலாக்கப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக எஸ்.ஆர்.செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை தலைமையகத்தின் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியாக எஸ்.எஸ்.மகேஸ்வரன், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக செல்வராஜ், சென்னை சிபிசிஐடி எஸ்.பியாக ஜெ.முத்தரசி தொடர்வார் என கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

சென்னை காவல்துறை தலைமை டி.ஐ.ஜியாக அபிஷேக் தீக் ஷித் நியமிக்கப்பட்டுள்ளார். விருத்தாசலம் ஏ.எஸ்.பியாக உள்ள அங்கித் ஜெயின் சென்னை மத்திய மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மயிலாப்பூர் துணை ஆணையராக ரஜத் சதுர்வேதியை நியமித்துள்ளார் பணீந்திர ரெட்டி. விளாத்திக்குளம் ஏ.எஸ்.பியாக உள்ள ஸ்ரேயா குப்தா, சென்னை குற்ற ஆவணக் காப்பக எஸ்பியாகவும், திண்டிவனம் ஏ.எஸ்பியாக உள்ள அபிஷேக் குப்தா, திருப்பூர் நகர வடக்கு துணை ஆணையராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். பெருந்துறை ஏ.எஸ்.பி கவுதம் கோயல், மதுரை நகர காவல்துறை தலைமையக துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஓசூர் ஏ.எஸ்.பி பி.கே. அரவிந்த், மதுரை நகர வடக்கு துணை ஆணையராகவும், திண்டுக்கல் ஊரக ஏ.எஸ்.பி ஏ.கே அருண் கபிலன் சென்னை தியாகராய நகர் காவல்துணை ஆணையராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.