2026 அமைதிக்கான நோபல்பரிசை வென்றார் தமிழ் வம்சாவளி நவனீதம் 'நபி' பிள்ளை!
2026-ஆம் ஆண்டிற்கான புகழ்பெற்ற நோபல் அமைதிப் பரிசை (Nobel Peace Prize), தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞரும் சர்வதேச நீதிபதியுமான நவனீதம் "நபி" பிள்ளை (Navanethem "Navi" Pillay) வென்றுள்ளார் என நார்வே நோபல் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
1941-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் இந்திய தமிழ் வம்சாவளிக் குடும்பத்தில் பிறந்த நவனீதம் பிள்ளை, அந்நாட்டின் கொடுமையான அபார்தீட் (Apartheid) இனவெறி ஆட்சிக் காலத்தில் வளர்ந்தவர்.அக்காலத்தில் நிலவிய தீவிர இனக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் வழக்கறிஞராகப் பட்டம் பெற்று, நடால் மாகாணத்தில் சட்டம் பயின்ற முதல் தமிழ் வம்சாவளி பெண் வழக்கறிஞர் என்ற பெருமையைப் பெற்றார். இனவெறிக்கு எதிராகப் போராடிய பல ஆர்வலர்களுக்காக நீதிமன்றத்தில் வாதிட்டதுடன், சிறைகளில் கைதிகளுக்கு இழைக்கப்பட்ட பாகுபாடுகளுக்கு எதிராக உறுதியாகப் போராடினார்.
தென்னாப்பிரிக்காவின் இனவெறி ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, சர்வதேச நீதிபதியாக உயர்ந்து பல வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை இவர் வழங்கியுள்ளார்:
ருவாண்டா சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICTR): ருவாண்டா இனப்படுகொலை தொடர்பான வழக்கின் நீதிபதியாகச் செயல்பட்ட நவனீதம் பிள்ளை, "போர்க் காலத்தில் நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை (Rape) என்பது வெறும் குற்றமல்ல, அதுவும் ஒரு வகையான இனப்படுகொலையே (Genocide)" என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கச் சர்வதேசச் சட்ட முன்னுதாரணத்தை நிறுவினார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC): சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், 2008 முதல் 2014 வரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமை ஆணையராகவும் (UN High Commissioner for Human Rights) மிகச் சிறப்பாகப் பணியாற்றினார்.
நீதி மற்றும் மனித உரிமைகளுக்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துள்ள தமிழ் வம்சாவளி பெண் நவனீதம் பிள்ளைக்கு நோபல் அமைதிப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதற்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
நோபல் விருதினை கண்டறிந்தது யார்? எதற்காக இந்த நோபல் விருது வழங்கப்படுகிறது? எந்த ஆண்டு முதல் வழங்கப்படுகிறது? விருதுகளுக்கு பின்னணியில் உள்ள சுவாரசிய நிகழ்வுகள் என்னென்ன? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
ஆல்ஃப்ரடு நோபல் (Alfred Nobel) எனும் விஞ்ஞானியின் இறுதி ஆசை தான் இந்த நோபல் பரிசு என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
யார் இந்த ஆல்ஃப்ரடு நோபல்?
ஆம், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்ஃப்ரடு நோபல் (1830-1896), தனது காலக்கட்டத்தில் ஒரு தலைசிறந்த விஞ்ஞானியாக திகழ்ந்தார். ராணுவத்திலும், சுரங்கங்களிலும் பயன்படுத்தப்படும் பல்வேறு வெடிப்பொருட்களை கண்டுபிடித்தவர் இவர். 150-க்கும் மேற்பட்ட வெடிப்பொருட்களை அவர் கண்டறிந்தார். குறிப்பாக, அனைவரும் அறிந்திருக்கும் 'டைனமைட்' வெடிப்பொருளும் இவர் உருவாக்கியதுதான். இதனால் இவர் நாசக்கார விஞ்ஞானி என்ற பெயரையும் பெற்றிருந்தார்.
மனதை மாற்றிய வார்த்தை
இதனிடையே, 1888 ஆம் ஆண்டில், ஆல்ஃப்ரடு நோபலின் சகோதரர் லுட்விக் நோபலின் மரணத்தின்போது பல செய்தித்தாள்கள் ஆல்ஃப்ரடு நோபல் இறந்துவிட்டதாக நினைத்து செய்திகள் வெளியிட்டன. அதில் ஒரு பிரெஞ்சு இதழ், 'மரண வியாபாரி ஆல்ஃப்ரடு நோபல் மரணம்' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது.
இதனைக் கண்ட நோபல் மிகவும் மனம் நொந்தார். வரலாற்றில் தனது பெயர் இப்படி மோசமாக பதிவு செய்யப்படுவதை விரும்பாத அவர், வெடிப்பொருள்களின் கண்டுபிடிப்புக்காக தான் சம்பாதித்த முக்கால்வாசி சொத்துகளை பொது சேவைக்காக செலவிட தொடங்கினார்.
இறுதி ஆசை நோபல் பரிசு
விஞ்ஞானியாக மட்டுமல்லாமல் தொழில் முனைவர், பொறியாளர், வேதியியல் நிபுணர், வியாபாரம், கவிஞர், நாடகத்துக்கு கதை எழுதுபவர் என பல்துறை வித்தகனாக ஆல்ஃப்ரடு நோபல் திகழ்ந்தார்.
ஆல்ஃப்ரடு நோபலின் மனதில் ஒரு ஆசை எப்பொழுதுமே இருந்தது. அறிவியல், மருத்துவம், நாடகம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் கெளரவிக்கப்பட வேண்டும் என்கிற பேராவல் அவரது மனதில் இழையோடிக் கொண்டே இருந்தது.
இந்த சூழலில்தான், தான் இறப்பதற்கு முன்பு 1895-ஆம் ஆண்டு உயில் ஒன்றை எழுதினார் ஆல்ஃப்ரடு நோபல். அதில், தனது சொத்துகளின் பெரும் பகுதியை விற்று, மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் மிகப்பெரிய பங்களிப்பை அளிப்பவர்களுக்கு பரிசு வழங்க வேண்டும் என ஆல்ஃப்ரடு நோபல் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு அடுத்த ஆண்டே ஆல்ஃப்ரடு நோபல் மரணம் அடைந்தார். விஞ்ஞானத்தில் மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றிய அவரது இறுதி ஆசையை நிறைவேற்றும் வகையில்தான் 1901-ம் ஆண்டு தொடங்கி இப்போது வரை நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

