சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருதை பெற்றார் நடிகை ஜோதிகா.
Mar 6, 2024, 20:00 IST1709735426649
36 வயதினிலே படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருதை பெற்றார் நடிகை ஜோதிகா.
2015 ஆம் ஆண்டின் தமிழக அரசின் திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தன இதில் சிறந்த நடிகையாக 36 வயதினிலே திரைப்படத்தில் நாயகியாக நடித்த நடிகை ஜோதிகா தேர்வு பெற்றிருந்தார்.
இதற்கான விருது வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ் பேரவை டிஎன் ராஜரத்தினம் கலையரங்கில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு சிறந்த நடிகைக்கான விருதினை நடிகை ஜோதிகா பெற்றுக் கொண்டார்.