பெட்ரோல் பங்குகளில் ரூ.2,000 வாங்கப்படும்

 
petrol

நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி கடந்த 10 ஆம் தேதி அறிவித்துள்ளது.

petrol bunk

கையில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் தங்கள் கணக்கில் செலுத்திக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதாவது செப்டம்பர் 30ந் தேதிக்குள் மாற்றிக் கொள்ள மத்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேபோல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் மட்டுமில்லாமல் ஆர்பிஐ-ன் 10 பிராந்திய அலுவலகங்களிலும் ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளாம்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் ரூ.2000 நோட்டுகள் வாடிக்கையாளர்களிடம் வாங்கப்படும் என தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. பெட்ரோல் பங்க்களில் சில்லறை தட்டுபாடு ஏற்படாமல் இருக்க வங்கிகள் தடையின்றி ரூ.2000 நோட்டுகளுக்கு சில்லறை வழங்கிட வேண்டும் ந பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.