ரூ.2,000 நோட்டுகளை பேருந்துகளில் மாற்றலாம்!

 
bus

வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  

 ₹2000 நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது RBI!

தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகள் படிப்படியாக திரும்ப பெறப்படும் எனவும் அறிவித்துள்ளது. கையில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் தங்கள் கணக்கில் செலுத்திக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதாவது செப்டம்பர் 30ந் தேதிக்குள் மாற்றிக் கொள்ள மத்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேபோல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே செவ்வாய் கிழமை முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி மண்டலத்திற்கு உட்பட்ட பேருந்துகளில் பொதுமக்கள் பயணச்சீட்டு வாங்குவதற்காக 2000 ரூபாய் நோட்டு தாள்களை வழங்கினால் நடத்துனர்கள் அதனை வாங்க கூடாது என்று போக்குவரத்து மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில், அரசு பேருந்துகளில் பயணிகள் தரும் ரூ.2000 நோட்டுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் பயணிகள் தவிர வெளிநபர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அனுமதி இல்லை எனவும் போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.