20 இடங்களில் சதமடித்த வெயில்.. அடுத்து வரும் நாட்களும் இதே நிலைதான்..

 
20 இடங்களில் சதமடித்த வெயில்.. அடுத்து வரும் நாட்களும் இதே நிலைதான்..

தமிழகத்தில் சென்னை உள்பட 20 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது. அடுத்து வரும் நாட்களிலும்  வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.  

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியபோதிலும்,  ஆரம்பத்தில் சில இடங்களில் மழை பெய்தது.  இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வந்தது. வெயிலின் தாக்கமும் பெரிதாக பாதிக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சென்னை உள்பட தமிழகத்தில் சில மாவட்டங்களில் வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படியே நேற்று முன்தினம் 12 மாவட்ட மாவட்டங்களில் வெயில் சதமடித்தது. அந்தவகையில் சென்னையில் 104 டிகிரி ஃபாரன்ஹீட்டை  தாண்டி வெயில் கொளுத்தியது.

20 இடங்களில் சதமடித்த வெயில்.. அடுத்து வரும் நாட்களும் இதே நிலைதான்..

இதந்தொடர்ச்சியாக சென்னையில் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நேற்று 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி மக்களிடையே கலக்கத்தை உருவாக்கியுள்ளது. சென்னையில் வெயிலின் அளவு 4 டிகிரி அதிகரித்து 107 டிகிரியாக பதிவாகும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது.  ஆனால் அந்த கணிப்பையும் தாண்டி சென்னை மீனம்பாக்கத்தில் 109° ஆக பதிவாகியுள்ளது. வழக்கமாக அதிக வெப்பம் பதிவாகும் வேலூரில் நேற்று  108 டிகிரி வெப்பநிலை பதிவானது.  இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.  சென்னை திருவள்ளூர் வேலூர் மட்டுமல்லாது திருச்சி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் நேற்று வெயில் சதம் அடித்தது.

20 இடங்களில் சதமடித்த வெயில்.. அடுத்து வரும் நாட்களும் இதே நிலைதான்..

மேலும்,  சென்னையின் கடலோர பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. இந்த அதிக வெயிலுக்குக் காரணம்,  மோக்கா புயல் மியான்மர் இடையே கரையைக் கடந்தபோது இந்திய பகுதியில் இருந்த ஈரப்பதங்களை எடுத்துச்சென்று விட்டதாகவும், தற்போது தரைக்காற்று வீசத்தொடங்கியுள்ளதால்  சென்னை சுற்றியுள்ள  அமைத்து பகுதிகளிலும் 40 டிகிரி செல்சியஸ்-க்கும் அதிகமாக வெப்பம் காணப்படும் என்றும் கூறப்படுகிறது.  பொதுவாக வெப்பம் அதிகரிக்கும் போது கடல்காற்று வந்து வெப்பத்தை தணிக்கும்.  ஆனால் கடந்த 2 நாட்களாக  கடல்காற்று தாமதமாகவே வருவதாகவும், அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு வடமேற்கு திசையில் இருந்து வீசக்கூடிய தரைக்காற்று வீசக்கூடும் என்றும், வரும் நாட்களிலும்  வெப்பம் அதிகரித்து காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.