மதுரையில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை!!

 
ttn

மதுரையில் 20  இடங்களில் 3வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது.

tn

மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெயபாரத், அன்னை பாரத் மற்றும் கிளாட்வே சிட்டி ஆகிய தனியார் கட்டுமான நிறுவனங்களில் பல கோடி ரூபாய்க்கு வருமான வரியை நடந்துள்ளதாக தகவல் கிடைத்த நிலையில்,  நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் மதுரைக்கு சென்றனர்.  மதுரையில் உள்ள வருமானவரித்துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்புடன் அவினியாபுரம், வில்லாபுரம் ,திருப்பாலை, திருபுவனம் ஆகிய இடங்களில் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களிலும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் வீடுகளிலும் ரெய்டு நடத்தப்பட்டது. 

RAID TTN

இந்நிலையில் மதுரையில் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அவனியாபுரம், கோச்சடை உட்பட 20க்கும் மேற்பட்ட இடங்களில் கிளாட்வே, அன்னை பாரத், ஜெயபாரத், கேட்வே,கிரீன் சிட்டி கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில்  இன்று காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இச்சோதனையில் கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் கிலோ கணக்கில் தங்க வைர, நகைகள் மற்றும் சொத்து விவரங்கள் அடங்கிய முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.