தாம்பரம்- சென்னை கடற்கரைக்கு நாளை முதல் 20 கூடுதல் விரைவு சிறப்பு மின்சார ரயில்கள்

 
train

தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரைக்கு நாளை (பிப்.27) முதல் 20 கூடுதல் விரைவு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

train

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் பயணிகள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் கூடுதலாக 20 விரைவு சிறப்பு மின்சார ரெயில் சேவைகள் நாளை(வெள்ளிக்கிழமை) முதல் இயக்கப்பட உள்ளது. இந்த விரைவு மின்சார ரெயில்கள் மாம்பலம், கிண்டி, எழும்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.

தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கும், கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கும் 1 மணி நேரத்தில் சென்றடையும். இந்த 20 விரைவு மின்சார ரெயில்களுக்கான கால நேர அட்டவணையின் விவரம் வருமாறு:-

கடற்கரை-தாம்பரம்:- காலை 7.50, 8.20, 9.20, 9.50, 10.15 மாலை 5.15, 5.30, 6.20, இரவு 7.10, 8.

தாம்பரம்-கடற்கரை:- காலை 7.40, 8.10, 9.10, 9.40, 10.05, 11.10, மதியம் 12, மலை 6.05, 6.50, இரவு 7.35.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.