குருமா கொட்டியதில் 3 வயது குழந்தை உயிரிழப்பு
Nov 23, 2025, 09:51 IST1763871663127
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் உடையாகுடி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த ஆனந்த் என்பவரின் மகன் 3 வயது சிறுவன் சுஷாந்த் குருமா கொட்டியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 18ஆம் தேதி வீட்டின் தன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மாடியில் இருந்து தடுமாறி விழுந்ததால்,கீழே போடப்பட்டுள்ள தகர சீட்டில் விழந்து ஹோட்டலுக்கு தயார் செய்து வைத்திருந்த சூடான சால்னா குருமா அண்டா மீது விழுந்தது கீழே விழும்போது அண்டா சாய்ந்து குருமா குழந்தையின் மேலே கொட்டி விட்டது. இதில் 90% காயம் பட்டு காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சென்னை KMC மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த குழந்தை இன்று சிகிச்சை பலனின்றி இறந்து விட்டது. குழந்தைக்கு பிரேத பரிசோதனை நாளை நடைபெற உள்ளது.


