விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தை சுவர் விழுந்து பலி

 
a a

ஆம்பூர் அருகே வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுமி மீது சுவர் விழுந்து விபத்துகுள்ளானது. படுகாயம்  அடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

 


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த குமாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பூவரசன். இவரது மகள் ஹரிவர்ஷினி(2 வயது). இந்நிலையில் இன்று சிறுமி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது, சுரேஷ் என்பவரின் வீட்டின் பக்கவாட்டு சுவர் சிறுமி மீது  விழுந்துள்ளது, இதில் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேல்சிகிச்சையிற்காக வேலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு  வருகின்றனர்.