கணவருக்கு 3-வது திருமணம் செய்து வைக்கும் 2 மனைவிகள்! அதிர வைக்கும் காரணம்!

 
பத்திரிக்கை

ஆந்திராவில் கணவருக்கு பத்திரிக்கை அடுத்து மூன்றாவது திருமணம் செய்துவைத்த மனைவிகளின் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம் பெடபயலு கிராமத்தை சேர்ந்த பாண்டண்ணா என்பவர் முதலில் பர்வதம்மாவை திருமணம் செய்தார். ஆனால் இவர்களுக்கு குழந்தை பிறக்காததால் முதல் மனைவியே உடன் இருந்து அப்பலம்மாவை இரண்டாவது  திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2007ல் ஆண் குழந்தை பிறந்தது. 

இந்நிலையில்   கணவர் பாண்டண்ணா இரண்டாவது குழந்தை கேட்டதால் மனைவிகள் இருவரும் தாங்களாகவே முன்வந்து மூன்றாவது திருமணம் செய்து வைக்க முடிவு செய்து அதே ஊரை சேர்ந்த  லாவ்யா என்ற இளம் பெண்ணை மூன்றாவது திருமணம் செய்து வைத்தனர். இரண்டு மனைவிகள் புகைப்படத்துடன் மூன்றாவது திருமணத்திற்கு கணவருக்கு பத்திரிக்கை அடித்து திருமணம் செய்ய வைக்கவுள்ளனர். அவரது பத்திரிக்கை புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.