நீலகிரி எமரால்டு அணை கரை பகுதியில் 2 புலிகள் உயிரிழப்பு

 
நீலகிரி எமரால்டு அணை கரை பகுதியில் 2 புலிகள் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் எமரால்டு அணை கரை பகுதியில் 2 புலிகள் உயிரிழந்தன. அதில், அவலாஞ்சி வனப் பகுதியில் சுற்றித் திரிந்த மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்ட வெள்ளைப் புலியும் ஒன்று என்பது தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு நீலகிரி வனத் துறையினர் விரைந்துள்ளனர். இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

Image

உதகை அருகே எமரால்டு வன பகுதிக்கு உட்பட்ட அவலாஞ்சி அணை முகதூவரா பகுதியில் 2 புலிகள் இறந்து கிடந்த விவகாரத்தில் இறந்த புலிகளின் உடல்களில் காயங்கள் ஏதுமில்லை என்றும் விஷம் வைத்து கொல்லபட்டிருக்கலாம் என நீலகிரி வன கோட்ட வன அலுவலர் கௌதம் விளக்கம் அளித்துள்ளார்.

நாளை காலை 3 வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் 2  கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட 5 மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்ய உள்ளதாகவும் சம்பவம் நடந்துள்ள இடத்தை சுற்றி உதவி வன அலுவலர் தேவராஜ் தலைமையில் 20 பேர் கொண்ட குழு விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

இரண்டு புலிகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு இறந்துள்ளனவா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது பிரேத பரிசோதனைக்கு பின்னர் தெரியவரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.