+2 தேர்வு எழுதாத மாணவர்கள், ஜூன் மாத தேர்வில் பங்கேற்க நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்
Mar 16, 2023, 09:13 IST1678938187791

நடப்பாண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள், தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறாத மாணவர்களும் ஜூன் மாத தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இந்த மாணவர்கள் அனைவருக்கும் தனியாக சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டார். +2 பொதுத்தேர்வில் 50,000 மாணவர்கள் பங்கேற்காதது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்!.