ஆசையாய் வாங்குன பைக்கே எமனான சோகம்! டியூக் பைக்கால் 2 மாணவர்கள் பரிதாப பலி
பூவிருந்தவல்லி அருகேல தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற போது 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்த பூவிருந்தவல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பழனி(50). இவரது மகன் நிர்மல்(19), நிர்மலுக்கு அவரது பெற்றோர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு செல்ல பைக் வாங்கி தந்துள்ளனர். அதிவேகமாக செல்லும் அந்த ட்யூக் பைக் எளிதாக 150 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல கூடியது. இந்த நிலையில் கல்லூரி படிக்கும் நிர்மல் குமார் அவரது டிப்ளமோ படிக்கும் அவரது நண்பர் சந்தோஷ் ஆகிய இருவரும் தனியார் கம்பெனியில் பகுதி நேரமாக் வேலை செய்து வந்தனர்.
இன்று காலை இருவரும் அவரது புது பைக்கில் டீ அருந்த சென்றதாக கூறப்படுகின்றது. அப்போது சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, முன்னாள் சாலையில் நின்று கொண்டு இருந்த கறிக்கோழி ஏற்றி வந்த லோடு வேன் மீது பைக் அதிவேகமாக மோதியது. இதில் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து ஆவடி போக்குவரத்து காவல்துறையினர் வேன் ஓட்டுநர் அகமது கைது செய்து விசாரித்து வருகின்றனர். பெற்றோர் ஆசையாக வாங்கி தந்த பைக்கில் அதிவேகமாக சென்றால் விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதனிடையே புதிதாக வாங்கிய பைக்கை ஷோருமில் கொண்டாடும் காட்சி வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


