பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியாரை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு

 
பாதிரியார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாலியல் புகாரில் சிக்கி உள்ள பாதிரியார் பெனடிக்ட்  ஆன்றோவை கைது செய்ய ஏ.டி. எஸ்.பி. ராஜேந்திரன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.  

Image

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ(29). இவர் குழித்துறையை தலைமையிடமாகக் கொண்ட சீரோ மலங்கரை கத்தோலிக்க சபையில் பாதிரியாராக உள்ளார். இவர் பேச்சிப்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள சர்ச்சுகளில் பாதிரியாராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பு தக்கலை அருகே உள்ள பிலாங்காலை சர்ச் பாதிரியாராக பொறுப்புக்கு வந்துள்ளார். 

இந்த நிலையில் பாதிரியார் பெனடிக்ட் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. மேலும், சர்ச்சுக்கு வரும் பெண்களுக்கு இரட்டை அர்த்தத்தில் வாட்ஸ் அப்-பில் அனுப்பிய மெசேஜ்களின் ஸ்கிரீன் சாட்களும், அவரது ஆபாச வீடியோ காலிங் ஸ்கிரீன் சாட் களும் சமூக வலைத்தளங்களில் பரவியது.

பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து பாதிரியார் பாலியல்லீலை ; 5 பிரிவுகளில் வழக்கு

அதே சமயம் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது பெண்கள் யாரும் புகார் அளிக்காததால் வழக்குப்பதிவு செய்யப்படாமல் இருந்துவந்தது. இந்த நிலையில் பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த 18 வயது நர்சிங் கல்லூரி மாணவி  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த 11ம் தேதி புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

பாலியல் உணர்வை தூண்டுவது, பெண் வன்கொடுமை, சமூக வலைத்தளங்களில் ஆபாச போட்டோக்கள் அனுப்புதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக இருக்கும் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் பாதிரியாரை கைது செய்வதற்காக  நாகர்கோவில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.