பாலமேடு ஜல்லிக்கட்டில் 2 சுற்றுகள் நிறைவு...

 
பாலமேடு ஜல்லிக்கட்டில் 2 சுற்றுகள் நிறைவு...

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டு சுற்றுகள் முடிவடைந்துள்ளன.  

உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணியளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளின் திமிலை பிடித்து மாடுபிடி வீரகள் அடக்கி வருகின்றனர்.  இந்த  பாலமேடு  ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 காளைகள்,  335 மாடு பிடிவீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் வெற்றி பெறும் காளைகள் மற்றும்  மாடுபிடி வீரர்களுக்கு கார்,  மொபட்,  பீரோ , கட்டில், சைக்கிள் உள்ளிட்ட  பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளன.  அத்துடன் சிறந்த வீரர்கள் மற்றும் காளைகளுக்கு  அமைச்சர் மூர்த்தி சார்பில் தங்க நாணயங்கள் வழங்கப்பட்டு வருகிறது.  அத்துடன்  அண்டா, நாற்காலிகள், மிக்ஸி, கிரைண்டர் போன்ற பரிசுகளும் வழக்கப்படுகின்றன.   முதல் இடம் பிடிக்கு வீரருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.

பாலமேடு ஜல்லிக்கட்டில் 2 சுற்றுகள் நிறைவு...

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் சுற்று முடிவில், 7 காளைகள் பிடித்து பாலமேட்டை சேர்ந்த பாலா முதலிடத்தில் இருந்தார்.  6 காளைகள் பிடித்து அரவிந்த் 2வது இடத்திலும்,  3 காளைகள் பிடித்து அஜித்குமார் 3வது இடத்திலும் இருந்தனர். இந்நிலையில் தற்போது இரண்டு சுற்றுகள் முடிவடைந்துள்ளன.  இரண்டாம் சுற்று முன்னிலை நிலவரப்படி, போட்டியில் தலா 9  காளைகளை அடக்கி ராஜா,  மணி ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர். 8 காளைகளை அடக்கி அரவிந்த் இரண்டாவது  இடத்திலும்,  6 காளைகளை அடக்கி வாஞ்சிநாதன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் தற்போது வரை 200 காளைகள் 65 மாடுபிடி வீரர்கள் களம் கண்டுள்ளனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 6  பேர் காயமடைந்துள்ளனர்.