கைதி விக்னேஷ் கொலை வழக்கு - 2 காவலர்கள் கைது!!

 
tn

சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரத்தில் 2 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டப்பேரவையில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,  விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.  அப்போது பேசிய அவர் , விக்னேஷின் பிரேத பரிசோதனையில் 13 இடங்களில் உடலில் காயம் இருப்பது தெரியவந்துள்ளது.  தலையில் பலத்த காயம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது . முதலமைச்சரின் தகவலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் உள்ள தகவல்களும் முரண்பாடாக உள்ளது. இந்த வழக்கு முறையாக நடைபெற சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Stalin and eps

 இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், விக்னேஷ் இறப்பு குறித்து சந்தேக மரணம் என முறைப்படி வழக்கு பதிவு செய்து மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்று வருகிறது.  அவரது உடல் பிரேத பரிசோதனை நடைபெற்று உறவினர்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.  விசாரணையில் தலைமைச் செயலக காலனி காவல் நிலைய உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள் , காவலர் பொன்ராஜ்,  ஊர்க்காவல் படை காவலர் தீபக் ஆகியோர் தற்கால பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது . விக்னேஷ் மரணம் தொடர்பாக சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.  இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு காவலர்கள் மீது கொலை வழக்கு பதியப்பட்டு , விசாரணையை தொடர்ந்து நடத்திட சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

tn

இந்நிலையில் விசாரணை கைதியாக விக்னேஷ் கைது செய்யப்பட்ட அன்று விசாரணையில் ஈடுபட்ட தலைமை செயலக காலனி நிலைய எழுத்தர் முனாஃப் மற்றும் காவலர் பவுன்ராஜ் இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 2 காவலர்களிடமும்  விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.