கொடைக்கானல் அருவியில் குளித்த 2 பேர் சடலமாக மீட்பு!

 
அருவி

கொடைக்கானல்  பேத்து பாறை அஞ்சு வீடு அருவியில் குளிக்க சென்று மாயமாகிய இரண்டு இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்து பாறை பகுதியில் அஞ்சு வீடு அருவி அமைந்துள்ளது. இந்த அருவி மிக ஆபத்தான அருவிகளில் ஒன்றாக இருந்து வருகிறது . இந்த நிலையில் கொடைக்கானலை சேர்ந்த இளைஞர்கள் ஆன நசீர் மற்றும் கோகுல் இளைஞர்கள் தனது நண்பர்களுடன் இந்த அருவிக்கு பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அருவியில் குளித்துக் கொண்டிருந்த போது தண்ணீரில் மூழ்கி இருவரும் மாயமாகினர் . 

இதுகுறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு ஊர் மக்கள் உதவியுடன்  நேற்று மாலை வரை தேடியும் கிடைக்காத நிலையில் இன்று காலை முதல் மீண்டும் அருவியில் தேடினர் . நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு இருவரின் உடலானது சடலமாக மீட்கப்பட்டது . இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டுள்ளனர் . இந்த அருவிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் எனவும் பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கோரிக்கையும் எழுந்துள்ளது.