விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி!!

 
ttn

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது மின்சாரம் பாய்ந்ததில் 2 பேர் பலியாகியுள்ளனர்.

death

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதர் புத்தூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு நேற்று தேர் பவனி நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அனைத்து சமூகத்தினர் சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை சிறப்பு பூஜைகள் செய்து, இரவில் சிலையை கரைப்பதற்காக அலங்கரிக்கப்பட்ட கோவில் சப்பரத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்றுள்ளனர். விநாயகர் சிலையை தேரில்  வைத்து பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர். அப்போது  சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்தது. இதில் முனீஸ்வரன் (வயது 24), கருப்பையா மகன் மாரிமுத்து ஆகிய 2 பேர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர். அத்துடன் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.  

Death

வளையில் திருப்பியபோது மரத்தின் மீது மோதியதால் விளம்பர பலகை சப்பரத்தில் விழுந்ததில் மின்சாரம் தாக்கியது தெரியவந்துள்ளது. அத்துடன் சப்பரத்தை இழுத்து சென்ற முனீஸ்வரன் ,மாரிமுத்து, செல்வகிருஷ்ணன் ஆகியோரும் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டனர். இதையடுத்து அவர்கள் தற்போது நெல்லை மாவட்டம் சிவகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வருகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது 2 பேர் பலியானது அப்பகுதியில்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.