தமிழகத்திற்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்- மோடி நாளை தொடங்கிவைப்பு

 
PM Modi To Flag Off Goa-Mumbai Vande Bharat Train Virtually On Saturday

தமிழகத்திற்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்களை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

tn

வந்தே பாரத் ரயிலானது கடந்த 2019 ஆம் ஆண்டு புதுடில்லி - வாரணாசி இடையே முதலில் இயக்கப்பட்டது.  தற்போது சென்னை -மைசூர்,  சென்னை - கோவை என மொத்தம் 23 வந்தே பாரத்  இயக்கப்பட்டு வருகின்றன.  அதிவேகத்தில் செயல் திறன் கொண்ட இந்த ரயிலில் பயணிகளுக்கு விமானத்திற்கு நிகரான  சுழலும் இருக்கைகள்,  ஏசி,  விசாலமான ஜன்னல்கள் என சொகுசாக பயணிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மைசூரு, கோயம்புத்தூர் இடையே தலா ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.  இதேபோல, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையேயும் வந்தே பாரத் ரயிலை இயக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழகத்தின் தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் சென்னை - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை ரயில்வே வாரியம் தொடங்கியுள்ளது. 

vande bharat

இந்நிலையில் தமிழகத்திற்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்களை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு புதன் கிழமை தவிர மற்ற நாட்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும். இதேபோல் மதுரையில் இருந்து பெங்களூருவுக்கு செவ்வாய் கிழமை தவிர மற்ற நாட்களில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது.